
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று (ஆகஸ்ட் 13) இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. கனமழை காரணமாக, சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், வேலைக்கு செல்வோர் கடும் அவதியடைந்தனர். மழைநீர் மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்க பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்!
இந்த நிலையில், இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக, சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. துபாய், சார்ஜா, குவைத் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
77-வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் பலத்த பாதுகாப்பு!
அதேபோல், மழை காரணமாக, துபாய், ஷார்ஜாவில் இருந்து வந்த விமானங்கள் பெங்களூரு விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக, விமானச் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.