
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூபாய் 450 கோடியை விடுவித்தது மத்திய அரசு.

வெள்ள நீரில் பாட்டு பாடி.. படகோட்டி.. மகிழ்ந்த மன்சூர் அலிகான்
‘மிக்ஜாம்’ புயல் மற்றும் கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மழை நின்று இரண்டு நாட்களாகியும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில், புயல், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு ரூபாய் 5,060 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தி.மு.க.வின் நாடாளுமன்ற மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்து, முதலமைச்சரின் கடிதத்தை பிரதமரிடம் வழங்கி, தமிழகத்தில் உடனடியாக ரூபாய் 5,060 கோடியை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
‘கே.ஜி.எஃப்-3’ நிச்சயம் வரும்… அடித்துச் சொல்லும் பிரசாந்த் நீல்!
இந்த நிலையில், மாநில பேரிடர் நிவாரண நிதி திட்டத்தின் கீழ், இரண்டாவது தவணையின் மத்திய அரசின் பங்கான ரூபாய் 450 கோடியை தமிழகத்திற்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. ஏற்கனவே, முதல் தவணை விடுவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது தவணையை முன்கூட்டியே விடுவித்தது மத்திய அரசு. பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் இந்த நிதியானது விடுவிக்கப்பட்டுள்ளது.


