
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, முரசொலி நாளிதழுக்கு நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு கட்டுரை எழுதியுள்ளார். இந்த சிறப்பு கட்டுரை இன்றைய முரசொலி நாளிதழில் வெளியாகியுள்ளது.
ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ்!
அதில், “கலைஞர் இதயத்தில் எனக்கென்று தனி இடம் இருந்தது; முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். திரை உலக ஜாம்பவான்களான சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். ஆகியோர் புகழின் உச்சிக்கு செல்ல காரணமானவர் கருணாநிதி. கலைஞர் கருணாநிதி எந்த ஒரு முடிவையும் எடுத்தோம்; கவிழ்த்தோம் என்று எடுக்க மாட்டார்.
எம்.ஜி.ஆர்.யை கட்சியில் இருந்து நீக்கிய முடிவை நிச்சயம் பல பேரின் ஆலோசனை கேட்டு தான் எடுத்திருப்பார் கலைஞர். எம்.ஜி.ஆர்.-யை நீக்க வேண்டும் என சொன்னவர்கள் பலர் கட்சியில் இருந்து விலகி எம்.ஜி.ஆர். பக்கம் போனார்கள். அதனால் கலைஞர் கருணாநிதியின் இதயம் எவ்வளவு வேதனையில் துடித்திருக்கும்.
தடுப்பைத் தாண்டி சாலையில் புகுந்த சரக்கு ரயில்!
எதையும் தாங்கும் இதயம் என்று அண்ணா கருணாநிதியை நினைத்து தான் சொன்னாரோ? 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை என்றாலும் தனி ஆளாகக் கட்சியை வழிநடத்த மீண்டும் ஆட்சிக்கு வந்தவர் கருணாநிதி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.