ராமநாதபுரம் தொகுதியில் 30 சதவிகித தபால் வாக்குகள் நிராகரிப்பு
- Advertisement -

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள மையங்களில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கே தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பெரும்பாலான தொகுதிகளில் பாஜக கூட்டணி கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன. அதே சமயம், தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் முன்னிலையில் உள்ளன. தபால் வாக்குகளை தொடர்ந்து இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன

அந்த வகையில், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பதிவாகியிருக்கும் 30 சதவீத தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முறையான கைழுத்து இல்லை போன்ற ஒரு சில காரணங்களால் 30% தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.