Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநருக்கு திமுக செக்! நிதி ஒதுக்கீடு ரூ.3 கோடியாக குறைப்பு

ஆளுநருக்கு திமுக செக்! நிதி ஒதுக்கீடு ரூ.3 கோடியாக குறைப்பு

-

ஆளுநருக்கு திமுக செக்! நிதி ஒதுக்கீடு ரூ.3 கோடியாக குறைப்பு

ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய திமுக அரசு, ஆளுநர் மாளிக்கைக்கு ஒதுக்கப்படும் நிதியை குறைத்துள்ளது.

டிஸ்க்ரினரி பண்ட் என்ற இனத்தில் ஆளுநருக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.5 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக குறைக்கப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். பல்வேறு இனங்களில் அரசு ஒதுக்கிய நிதியை ஆளுநர் மாளிகை செலவிட்ட விதம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சட்டப்பேரவை கூட்டத்தொரில் பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “ஆளுநர் செயலகத்துக்கு ரூ.2.41 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு ரூ.3.6 கோடியாக உயர்த்தப்பட்டது. ஆளுநர் மாளிகைக்கான நிதி வெறும் ரூ.1 லட்சமாக இருந்ததை 3 மாதங்களில் ரூ.5 கோடி என அதிமுக ஆட்சியில் மாற்றிவிட்டனர். ஆளுநர் மாளிகைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டபோதுதான் விதிகள் மீறப்பட்டுள்ளன. ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.18 கோடியில் ரூ.11.32 கோடி எங்கே செலவிடப்பட்டது என்பது தெரியவில்லை” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

MUST READ