Homeசெய்திகள்தமிழ்நாடுசீமான் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு

சீமான் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு தொகுதியில் சீமான் இன்று பரப்புரை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் பிரச்சாரம் வருகின்ற 25ம் தேதி மாலை ஐந்து மணியுடன் நிறைவடைய உள்ளதை அடுத்து இறுதி கட்ட பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சி சார்பில் போட்டியிடும் மேனகாவுக்கு ஆதரவாக இரண்டாம் கட்ட பரப்புரையில் நேற்று முதல் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சீமான் வேட்பாளருடன் திறந்த வெளி பிரச்சார வாகனத்தில் அக்கட்சி நிர்வாகிகளுடன் செல்லும் பொழுது செல்லும் வழியில் மாற்றுக் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் போது அவர்களிடம் பலத்த முழக்கங்கள் எழுப்பி விவசாயி சின்னத்திற்கு வாக்குகள் கேட்பதும் அதற்கு எதிர் தரப்பினர் அவர்கள் கட்சிக்கு வாக்குகள் கேட்பதும் என தொடர்ச்சியாக நிகழ்ந்து அவர்களுக்குள் மோதல் ஏற்படும் சூழல் உருவாகி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

சீமான் வாகன பிரச்சாரத்தின் போது திமுக தேர்தல் பணிமனையில் நின்று கொண்டிருந்த திமுகவினர் முன்பு பலத்த முழக்கங்கள் எழுப்பி நாம் தமிழர் கட்சியினர் விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். அப்போது திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. நாம் தமிழர் கட்சியினர் திமுகவினரை கொடி கம்பு மற்றும் கற்களால் சரமாரியாக தாக்கிய நிலையில், பதிலுக்கு திமுகவினரும் நாம் தமிழர் கட்சியினரை தாக்கியதால் கலவரம் வெடித்தது. இரு கட்சியினருக்குமிடையே ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறியது. இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த 11 பேர் மற்றும் மூன்று காவல்துறையினர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திமுக- நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் போக்கு தொடர்வதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் சீமான் இன்று பரப்புரை மேற்கொள்ள அனுமதி மறுத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

MUST READ