spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநர் பரிந்துரைகளை நிராகரிக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

ஆளுநர் பரிந்துரைகளை நிராகரிக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

-

- Advertisement -

தமிழக சட்டப்பேரவையில், ஆளுநரின் பரிந்துரைகளை நிராகரிக்கும் தீர்மானம் இன்று(அக்.16) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.ஆளுநர் பரிந்துரைகளை நிராகரிக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்சித்த மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதாவை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஆளுநரின் பரிந்துரைக்கு எதிராக, முதல்வர் மு.க. ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதை சட்டப்பேரவை குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தீர்மானத்தை முன்வைத்தபோது முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, “சட்டம் இயற்றுவது என்பது சட்டப்பேரவையின் அதிகாரம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கே சட்ட முன்வடிவம் மற்றும் திருத்தங்களைச் செய்ய உரிமை உண்டு. ஆளுநருக்கு இத்தகைய அதிகாரம் இல்லை. சட்ட முன்வடிவம் குறித்து கருத்து தெரிவிக்கவோ, திருத்தம் முன்வைக்கவோ ஆளுநருக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமை இல்லை. ஆனால், அதற்கு மாறாக ஆளுநர் செயல்படுவது அரசியலமைப்பு மற்றும் சட்டப்பேரவை விதிகளுக்கு விரோதமானது.”

we-r-hiring

“சித்த மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதாவை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஆளுநரின் பரிந்துரையை ஏற்க முடியாது. இதனால் ஆளுநரின் பரிந்துரையை நிராகரிக்கும் தீர்மானத்தை இந்த பேரவையில் கொண்டு வருகிறோம்.” முதல்வர் முன்மொழிந்த இந்த தீர்மானம், எந்த எதிர்ப்பும் இல்லாமல், குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்குச் சான்றாக போற்றப்படும் – முதல்வர் புகழாரம்

MUST READ