Homeசெய்திகள்தமிழ்நாடுமெட்ரோ பணிகள் காரணமாக சென்னை இராயப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ பணிகள் காரணமாக சென்னை இராயப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்!

-

- Advertisement -

மெட்ரோ பணிகள் காரணமாக சென்னை இராயப்பேட்டையில்ல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தினர். இராயப்பேட்டை ஆர்.கே.சாலை 1 Point பாலத்தின் ஒரு பகுதியை இடிக்கும் பணியினை 08.04.2024 முதல் 14.04.2024 வரை 08 நாட்கள் இரவு நேரங்களில் (11.00 மணி முதல் 05.00 மணி வரை) செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. இப்பணியின் காரணமாக மேற்சொன்ன நாட்களுக்கு பின்வரும் போக்குவரத்து 7 உள்ளன மாற்றங்கள் செய்யப்பட்ட உள்ளன.

அண்ணா மேம்பாலம் சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்கு வரும் அனைத்து வாகனங்களும் மியூசிக் அகாடமி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி TTK சாலை வழியாக சென்று – இந்தியன் வங்கி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி வி.பி. ராமன் சாலை, அஜந்தா சந்திப்பு மற்றும் வி.பி. ராமன் சாலை வி.எம் தெரு சந்திப்பில் நேராக சென்று வலதுபுறம் திரும்பி -நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வழியாக சென்று – ஆர்.கே.சாலை, நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வழியாக இடதுபுறம் திரும்பி – காமராஜர் சாலை நோக்கி செல்லலாம்

காமராஜர் சாலையிலிருந்து ஆர்.கே.சாலை வழியாக அண்ணாசாலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வி.எம். தெரு, ஆர்.கே சாலை சந்திப்பு வழியாக இடதுபுறம் திரும்பி -வி.எம் தெரு.ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் வலதுபுறம் திரும்பி பி எஸ் சிவஸ்வாமி சாலை (எதிர்திசை ஒரு வழி போக்குவரத்து)- வலதுபுறம் திரும்பி விவேகானந்தா கல்லூரி சந்திப்பு வழியாக சென்று வலதுபுறம் திரும்பி – நீல்கிரிஸ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மியூசிக் அகாடமி மேம்பாலம் வழியாக சென்று அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லலாம்.

TTK சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் மியூசிக் அகாடமியில் சந்திப்பு TTK சாலை வழியாக நேராக சென்று இந்தியன் வங்கி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி – வி.பி. ராமன் சாலை அஜந்தா சந்திப்பில் – மற்றும் வி.பி. ராமன் சாலை, வி.எம் தெரு சந்திப்பில் நேராக சென்று வலதுபுறம் திரும்பி -நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வழியாக சென்று ஆர்.கே.சாலை, நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வழியாக இடதுபுறம் திரும்பி – காமராஜர் சாலை நோக்கி செல்லலாம்.

பி எஸ் சிவஸ்வாமி சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் நீல்கிரிஸ் சந்திப்பில் வலதுபுறம் திரும்பாமல் இடதுபுறம் திரும்பி மியூசிக் அகாடமி சர்விஸ் சாலையில் வலதுபுறம் திரும்பி TTK சாலை வழியாக நேராக சென்று – இந்தியன் வங்கி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி வி.பி. ராமன் சாலை, அஜந்தா சந்திப்பு. வி.பி. ராமன் சாலை. வி.எம் தெரு சந்திப்பில் நேராக சென்று வலதுபுறம் திரும்பி – நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வழியாக சென்று ஆர்.கே.சாலை, நீதிபதி ஜம்புலிங்கம் வழியாக – இடதுபுறம் திரும்பி காமராஜர் சாலை நோக்கி செல்லலாம்.

Luz Jn முண்டக்கன்னியம்மன் கல்விவாரு தெருவில் இருந்து இராயப்பேட்டை Point நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் 1 இராயப்பேட்டை நெடுஞ்சாலை, பி எஸ் சிவசாமி சாலை இடதுபுறம் திரும்பி நீல்கிரீஸ் சந்திப்பில் வலதுபுறம் திரும்பாமல் இடதுபுறம் திரும்பி மியூசிக் அகாடமி சர்விஸ் சாலையில் வலதுபுறம் திரும்பி TTK சாலை வழியாக நேராக சென்று இந்தியன் வங்கி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி – வி.பி. ராமன் சாலை அஜந்தா சந்திப்பில் – மற்றும் வி.பி. ராமன் சாலை, வி.எம் தெரு சந்திப்பில் நேராக சென்று வலதுபுறம் திரும்பி – நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வழியாக சென்று ஆர்.கே.சாலை, நீதிபதி ஜம்புலிங்கம் வழியாக இடதுபுறம் திரும்பி – காமராஜர் சாலை நோக்கி செல்லலாம்.தினந்தோறும் காலை 05.00 மணிக்கு டாக்டர் இராதகிருஷ்ணன் சாலையில் பொது போக்குவரத்து சீராக அனுமதிக்கப்படும். எனவே வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனக் குறிப்பிட்டுள்ளது.

 

 

MUST READ