Homeசெய்திகள்தமிழ்நாடு"ரூபாய் 1,000 உரிமைத்தொகை மீதே முழு கவனம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“ரூபாய் 1,000 உரிமைத்தொகை மீதே முழு கவனம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

 

"தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிடுக"- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
Photo: DMK

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 13) காலை 10.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசு நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளர் நிறுவனத்தில் படித்து தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

15,000 கையடக்கக் கணினிகளை வாங்குவதற்கான டெண்டர் வெளியீடு!

பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மகளிருக்கு ரூபாய் 1,000 உரிமைத்தொகைத் திட்டம் மீதே எனது முழு கவனமும் இருக்கிறது. இத்தோடு போதும் என்று படிப்பை நிறுத்தி விடாதீர்கள்; சமூகத்தைப் பற்றி நிறைய படியுங்கள். சட்டத்தின் படியும், மனசாட்சியின் படியும் நீங்கள் செயல்பட வேண்டும். மக்களிடம் கனிவாக நடந்துக் கொள்ள வேண்டும்.

ரூபாய் 1,000 உரிமைத்தொகை யாருக்கெல்லாம் அவசியமோ அவர்களுக்கு அறிவித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சூறைக்காற்றுடன் மழை- விமான சேவைகள் பாதிப்பு!

யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சிப் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 33 பேர் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

MUST READ