
வளிமண்டல மேலடுக்கு சுழற்சிக் காரணமாக, சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
காவாலாவை தொடர்ந்து வரும் ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கள் குறித்த அப்டேட்!
சென்னை புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்தது. சென்னை நகரில் கிண்டி, வேளச்சேரி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, கோயம்பேடு, போரூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர், மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
தொடர் மழை காரணமாக, சென்னையில் குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பரத், வாணி போஜன் கூட்டணியின் புதிய திரில்லர்………. ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!
இதனிடையே, சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 8 விமானங்களும் தாமதமானதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். அதேபோல், சென்னைக்கு வந்த 4 விமானங்கள் தாமதமாக தரையிறங்கின; ஒரு விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது.