spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு4 திட்டங்கள் மூலம் மாதம் ரூ.4000 மிச்சமாகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

4 திட்டங்கள் மூலம் மாதம் ரூ.4000 மிச்சமாகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

திராவிட மாடல் அரசின் 4 திட்டங்கள் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.4000 மிச்சமாகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.4 திட்டங்கள் மூலம் மாதம் ரூ.4000 மிச்சமாகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்  கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.328.48 கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்ற 314 பணிகளை திறந்து வைத்தார். இந்த விழாவில், 46 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா்.

we-r-hiring

அதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர், ரூ.24,947 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். ஆன்மீக அன்பர்களை ஈர்க்கும் இடம் திருவண்ணாமலை, ஆரணி அரசி, ஆரணி பட்டு என்று ஏராளமான பெருமைகள் கொண்ட மாவட்டம் என்று குறிப்பிட்டாா். அதேபோன்று, திமுகவுக்கு முதல் எம்.பி.யை தந்த பெருமையும் திருவண்ணாமலைக்கு உண்டு என்றாா்.

திருவண்ணாமலையின் பெருமைகள்
கடந்த 14ம் தேதிதான் திருவண்ணாமலைக்கு வந்து எழுச்சிமிகு திமுக இளைஞர் அணி மாநாட்டில் பங்கேற்றேன்.  2 வாரத்தில் மீண்டும்  உங்களை எல்லாம் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று மகிழ்ச்சி தெரிவித்தாா். கடந்த நான்கரை ஆண்டுகளில் நிறைவான பல திட்டங்களை செய்துள்ளோம். நாடே போற்றும் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம் என்ற உணர்வுடன் வந்துள்ளதாக கூறினாா்.

4 திட்டங்கள் 4000 வரை செமிப்பு
பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் உண்டாக வேண்டும் என்று பார்த்து பார்த்து ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.  சுமார் 900 கோடி முறை பெண்கள் கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர் என்று கூறினாா்.

மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம், காலை உணவுத் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகிய 4 திட்டங்களால் பெண்களுக்கு மாதம் ரூ.4000 வரை சேமிப்பு கிடைப்பதாக தெரிவித்தாா்.

19.34 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு
தமிழ் புதல்வன் திட்டத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் 19.34 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு சூடான சுவையான காலை உணவு வழங்கப்படுகிறது.  ”நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் 42.58 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மிகவும் எளிய பின்னணியில் இருந்த 137 மாணவர்கள் நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க தேர்வாகி உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 1,762 பள்ளிகளில் பயிலும் 80,869 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

திருவண்ணாமலைக்கு புதிய அறிவிப்புகள்
திருவண்ணாமலைக்கு  பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

  • சேத்துப்பட்டில் 12 கொடியில் 37 ஏக்கரில் புதிய சிப்காட் தொழிற்பெட்டை அமைக்கப்படும்.
  • கல்சப்பாக்கம் மல்லிகார்ஜீனசாமி திருக்கோயிலுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.
  •  புதிதாக தொடங்கப்பட்டுள்ள செங்கம் கலை கல்லூரியில் 15 புதிய கட்டடம் கட்டித் தரப்படும்.
  • திருவண்ணாமலையில் விதை சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தாா்.

ஒன்றிய அரசை விமர்சித்த முதல்வர்
ஒன்றிய பாஜக அரசு நமக்கான நிதியை தரவில்லை என்று குற்றம்சாட்டினாா். தமிழ்நாட்டின் வளர்ச்சி பலரது கண்களை கூசச் செய்கிறது என்றாா். தமிழ்நாட்டிற்கு எப்படியாவது அவப்பெயரை உண்டாக்க வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு குடைச்சல் கொடுப்பதற்காவே ஆளுநரை அனுப்பி வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் மீது வெறுப்புணர்ச்சியை பரப்பினால் அதன் மூலம் வடமாநிலங்களில் வாக்கு பெறலாம் என நினைக்கின்றனர். ஆனால் அந்த துரோகங்களையும் அடிமைத்தனத்தையும் தாண்டி தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது என்றார்.

டெல்லியின் கடுமையான காற்றுமாசு, ஒன்றிய அரசின் கட்டுமானப் பணிகள் விரைவில் இடிந்து விழுவது, 100 நாள் வேலைத்திட்டத்தை சிதைத்தது உள்ளிட்டவை குறித்து கடுமையாக விமர்சித்தார்.

மாநில உரிமைகள் பாதுகாப்பு
மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் காத்து வருவதை மக்கள் பாராட்டுவதாகவும், திமுகவுக்கு வாக்களிக்காதவர்களிடமும் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளதாகவும், திமுக அரசின் வெற்றிக் கதைகளை சொல்ல இந்த ஒரு விழா போதாது என முதலமைச்சர் தெரிவித்தார்.

மீண்டும் வேண்டும் ஸ்டாலின் – 1

MUST READ