Homeசெய்திகள்தமிழ்நாடுஎடப்பாடி பழனிசாமி கூட்டத்துக்கு வந்த அனைவருக்கும் தலா ரூ.500

எடப்பாடி பழனிசாமி கூட்டத்துக்கு வந்த அனைவருக்கும் தலா ரூ.500

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற 27ம் தேதி நடைபெற உள்ளது.

eps

இந்நிலையில் இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைய இன்னும் 7 நாட்களே எஞ்சியுள்ளதால் வேட்பாளர்களும் வேட்பாளர்கள் சார்ந்து உள்ள கட்சிகளின் தலைவர்களும் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த இரு தினங்களாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும்‌ முன்னாள் முதலமைச்சருமான பழனிசாமி, இன்று மூன்றாவது நாளாக அத்தொகுதிக்கு உட்பட்ட கருங்கல்பாளையத்தில் உள்ள ராஜகோபால் தோட்டம், தேர் முட்டி, மோசிகீரனார் வீதி, விவிசிஆர் நகர், மரப்பாலம் ஆகிய ஐந்து இடங்களில் அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசுவுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேர்க்க பரப்புரை மேற்கொண்டார்.

we-r-hiring

எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரைக்கு மக்களின் கூட்டத்தை அதிக அளவு அழைத்து வர அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் சுமார் 500 ரூபாய் மதிப்புடைய பெரிய அளவிலான தாம்பூல தட்டை பரிசாக வழங்கி அவர்களை அழைத்து வந்த நிலையில், அந்த தாம்பூல தட்டை கையில் ஏந்தி கூட்டத்திற்கு ஏராளமான பெண்கள் படையெடுத்து சென்றனர். பின்னர் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் அதிமுக நிர்வாகிகள் கொடுத்த அதிமுக கட்சித் துண்டை தோளில் அணிந்தும் பின்னர், அவர்கள் கொடுத்த மலரை எடப்பாடி பழனிச்சாமி மீது தூவியும் அவரை வரவேற்றனர். பின்னர் ஒவ்வொரு பகுதியிலும் கூட்டம் முடிந்த பிறகு அழைத்து வந்த மக்களுக்கு அந்தந்த பகுதி அதிமுக நிர்வாகிகள் சார்பில் பண பட்டுவாடா செய்யப்பட்டது. குறிப்பாக சில இடங்களில் டோக்கன்களை திரும்ப கொடுத்து பணத்தை பெற்ற மக்கள் மரப்பாலம் பகுதியில் அதிமுக நிர்வாகிகள் பட்டியல் படி பெயர் வாசிக்க கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் ஒவ்வொருவராக சென்று தலா 500 ரூபாயை பெற்று சென்றனர்.

இதே போல் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்ட பகுதி முழுவதும் கூட்டம் முடிந்த பிறகு ஆங்காங்கே பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நின்று, ஏற்கனவே அவர்கள் பேசி வைத்து வந்த தொகையான தலா 500 ரூபாயை பெற்று அங்கிருந்து சென்றனர். திமுகவினர் பணத்தை கொடுத்து அதிமுக கூட்டத்திற்கு வரவிடாமல் மக்களை தடுத்து வருவதாக ஒவ்வொரு கூட்டத்திலும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி வரக்கூடிய நிலையில், இன்று அவர் பேசும் கூட்டத்திற்கு அதிகப்படியான மக்களை வரவழைக்க 500 ரூபாய் மதிப்புள்ள பெரிய அளவிலான தாம்பூல தட்டை பரிசாக கொடுத்தும் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் ரூபாய் 500 ரூபாயை பெயர் வாசித்து அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கொடுத்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ