Homeசெய்திகள்தமிழ்நாடு"ரூபாய் 5,000 கோடியை என்ன செய்தீர்கள்?"- கணக்குக் கேட்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

“ரூபாய் 5,000 கோடியை என்ன செய்தீர்கள்?”- கணக்குக் கேட்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

-

 

"ரூபாய் 5,000 கோடியை என்ன செய்தீர்கள்?"- கணக்குக் கேட்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

ரூபாய் 900 கோடி மற்றும் ரூபாய் 5,000 கோடியை தமிழக அரசு என்ன செய்தது? என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்!

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “வெள்ள பாதிப்பு ஏற்பட்டதுடன் தமிழகத்திற்கு ரூபாய் 900 கோடியை ஒதுக்கினோம். சென்னைக்கு ரூபாய் 5,000 கோடியை சிறப்பு நிதியாக வழங்கி உள்ளோம். ரூபாய் 900 கோடி மற்றும் ரூபாய் 5,000 கோடியை தமிழக அரசு என்ன செய்தது? போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக தமிழகத்தைப் பார்த்து கண்ணீர் வருகிறது.

ஏற்கனவே வழங்கிய நிதிக்கு தமிழக அரசு கணக்குக் கூற வேண்டும். ரூபாய் 5,000 கோடியை முறையாக செலவிட்டிருந்தால் மிக்ஜாம் புயலால் சென்னை பாதிக்கப்பட்டிருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

அருணாச்சலப்பிரதேசத்தின் 30 இடங்களுக்கு பெயரிட்ட சீனா!

மத்திய நிதியமைச்சரின் சரமாரி கேள்வியால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழக அரசு விரைவில் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ