spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆர்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி!

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி!

-

- Advertisement -

 

நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம்- எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு!
File Photo

தமிழகத்தில் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

தமிழகத்தின் 33 இடங்களில் வரும் அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் அணி வகுப்பு ஊர்வலங்களை நடத்த அனுமதிக்க உத்தரவிடக்கோரி, ஆர்எஸ்எஸ் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

ஊர்வலத்திற்கு அனுமதிக்கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பத்தில் போதிய தகவல் இல்லை என்றும், ஆர்எஸ்எஸ் பேரணிக் கோரிய அதே காலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் பேரணி மற்றும் போராட்டங்களுக்கு அனுமதிக்கோரி உள்ளதாக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

அனுமதிக்கோரிய இடங்களில் மசூதிகள், தேவாலயங்கள் இருப்பதாகவும், பேரணியால் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒரு காரணத்தை அரசுக் கூறி வருவதாகவும், ஜாதகத்தைத் தவிர அனைத்து தகவல்களையும் காவல்துறையினர் கேட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

மகளிர் உரிமைத் திட்டம்- பயனாளிகள் சேர்ப்பு, தகுதியற்றவர்கள் நீக்கம்!

அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் கேட்கப்படும் கேள்விகள், பேரணிக்கு அனுமதிக்கோரும், அனைத்து அமைப்புகளிடமும் கேட்கப்படுமா எனக் கேள்வி எழுப்பினார். பேரணிக்கு அனுமதி மறுத்ததற்காக, காவல்துறைக் கூறிய காரணங்கள், ஏற்க கூடியதாக இல்லை என்றும், உள்ளூர் நிலவரங்களை ஏற்ப, மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளுடன் பேரணியை அனுமதிக்கலாம் என்றும் உத்தரவிட்டார்.

அணி வகுப்பு நடத்த அரசியல் சாசனம் அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கு தடை விதிக்க முடியாது, அமைதியான முறையில் பேரணியை நடத்தவும் போதிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்ட நீதிபதி, உச்சநீதிமன்ற நிபந்தனைகளைப் பின்பற்றி அணி வகுப்புகளை நடத்தலாம் என்றும், சீருடை இன்றி யாரையும் பேரணியில் அனுமதிக்கக் கூடாது என்று குறிப்பிட்டார்.

MUST READ