ஓய்வூதியம் பெறும் பத்திரிகையாளர்கள் அரசு நிகழ்ச்சிக்கு வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் விதியை மீறி அரசு நிகழ்ச்சிக்கு வரும் பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றும் தகவல் வெளியானது வதந்தி என உண்மை சரிப்பார்ப்பகம் தெரிவித்துள்ளது.செய்தித் துறையில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற பத்திரிகையாளர்களின் கணவன் அல்லது மனைவிக்கு ரூ.6000 மாத ஓய்வூதியம் வழங்கும் பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியத் திட்டத்தை (Journalist Family Pension Scheme) தமிழக அரசு வழங்கி வருகிறது. தமிழ்நாடு அரசு பொதுமக்களின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஏராளமான ஏழை, எளிய குடும்பங்கள் பயன் பெற்று வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், ஊடகத் துறையில் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்களுக்கும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் 2000 மட்டுமே மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஓய்வூதியம் பெறும் பத்திரிகையாளர்கள் அரசு நிகழ்ச்சிக்கு வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் விதியை மீறி அரசு நிகழ்ச்சிக்கு வரும் பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றும் தகவல் வெளியானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை வதந்தி என உண்மை சரிப்பார்ப்பகம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் இது போல எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றும் உண்மை சரிப்பார்ப்பகம் தெரிவித்தது.
பெண்கள் பாதுகாப்புக்கான “ஒன் ஸ்டாப் சென்டர்” (One Stop Centre – SAKHI)