spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"ரூபாய் 6,000 யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்?"- அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு!

“ரூபாய் 6,000 யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்?”- அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு!

-

- Advertisement -

 

"தமிழகத்தில் விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக முன் அனுமதி பெற வேண்டும்"- தமிழக அரசு அறிவிப்பு!
Photo: TN Govt

‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கு வெள்ள நிவாரணம் ரூபாய் 6,000 வழங்கப்படுவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

we-r-hiring

அத்துமீறிய நபர்களை எம்.பி.க்களே மடக்கிப் பிடித்தனர்!

அதில், சென்னையில் அனைத்து வட்டங்களிலும் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு ரூபாய் 6,000 நிவாரணம் வழங்கப்படும். செங்கல்பட்டில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களில் முழுமையாக நிவாரணம் வழங்கப்படும். திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்களில் பாதிக்கப்பட்டோருக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூரில் மூன்று வருவாய் கிராமங்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும்.

பென்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, ஆவடி, பூந்தமல்லி, திருவள்ளூர் ஆகிய வட்டங்களில் பாதித்தோருக்கும் ரூபாய் 6,000 நிவாரணம் வழங்கப்படும். மழை வெள்ளம் சூழ்ந்து துணிகள், வீட்டு உபயோகப் பொருட்களை இழந்தோருக்கும் நிவாரணம் வழங்கப்படும்.

நாடாளுமன்றத்தில் அத்துமீறிய நபர்களால் பரபரப்பு!

புயலால் வாழ்வாதாரம் பாதித்த, இரண்டு நாட்களுக்கு மேல் வெள்ளம் சூழ்ந்து பாதித்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ