spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல்வர் எப்போது முருகராக மாறினார்? – அன்புமணி கேள்வி

முதல்வர் எப்போது முருகராக மாறினார்? – அன்புமணி கேள்வி

-

- Advertisement -

பழனி முருகன் கோயிலில் வழிபாடு நடத்தச் செல்லும் பக்தர்களிடம்  முருகப் பெருமான் வரலாறு என்று கூறி, ரூ.2700 விலை கொண்ட  முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என பா ம க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளாா்.முதல்வர் எப்போது முருகராக மாறினார்? – அன்புமணி கேள்விமேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில், ”அதைவிடக் கொடுமை என்னவென்றால், முருகன் வரலாறு என்று கூறி விற்பனை செய்யப்படும் நூலின் பெரும்பாலான பக்கங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோரின் கருத்துகளும், அவர்களின் புகைப்படங்களும் நிறைந்திருப்பது தான்.

முருகன் வரலாறு என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் புகழ் பாடப்படுவதைக் காணும் போது  மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? என்ற வினா எழுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். அய்யோ பாவம்…  திராவிட ஆட்சியாளர்களின் அகராதியில்  ‘ஆண்டவர்’களை ஆள்பவர்களே  உயர்ந்தவர்கள்  என்று எழுதப்பட்டிருப்பது அவர்களுக்கு தெரியாது” என பா ம க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளாா்.

ராகுல்காந்தி கைது! வெடித்த டெல்லி போராட்டம்! தேர்தல் ஆணையம் அடவாடி! பத்திரிகையாளர் மணி பேட்டி!

we-r-hiring

MUST READ