spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தை குறைப்பது நியாயமா? – ஜவாஹிருல்லா ஆவேசம்

தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தை குறைப்பது நியாயமா? – ஜவாஹிருல்லா ஆவேசம்

-

- Advertisement -

சென்னையில் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளாா்.தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தை குறைப்பது நியாயமா? – ஜவாஹிருல்லா ஆவேசம்மேலும், அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மண்டலங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள்  1953 பேர் பணி செய்து வருகின்றனர். 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணி செய்து வரும் அவர்கள் ஊதியமாக 23 ஆயிரம் பெற்று வருகின்றனர்.  இத்தகைய சூழ்நிலையில் இந்த இரண்டு மண்டலங்களையும் தூய்மை செய்வதற்கு ராம்கி என்ற தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைத்து இருக்கின்றது. அந்த நிறுவனம் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு 16 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்குவதாக அறிவிப்பு செய்திருக்கிறது. ஏற்கெனவே 1, 2, 3, 7 ஆகிய மண்டலங்கள் இதே நிறுவனத்திடம் தான் 2021 இல் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சராக இருந்த போது ஒப்படைக்கப்பட்டது.

 

we-r-hiring

தூய்மைப்  பணியாளர்களுக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்டு வரும் 23 ஆயிரம் ஊதியமே குறைவானது. அதனை மேலும் குறைப்பது அநீதியான செயல். ஒரு வாரத்திற்கு மேலாக ரிப்பன் கட்டடம் முன்பு கூடாரமிட்டு இரவு பகலாக அறப்போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்” என்று வலியுறுத்தியுள்ளாா்.

ராகுல் காந்தி தலைமையில் ஊர்வலம்! எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது-த வெ க தலைவர் கண்டனம்

MUST READ