சேலத்தில் போக்குவரத்து போலீசாரை தாக்க முயன்ற நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி பகுதியில் கடந்த எட்டு மணியளவில் காரில் வந்த நான்கு பேர், சாலையில் சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதியபடி வேகமாக ஓட்டி சென்றுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மணல்மேடு பகுதியில் பணியிலிருந்த போக்குவரத்து காவலரிடம் புகார் அளித்துள்ளனர். உடனடியாக அந்த காவலர் காரை நிறுத்தி, காரில் இருந்தவர்களை கீழே இறக்கினார். அப்போழுது நான்கு பேரும் அதிக அளவில் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த நான்கு பேரும் போக்குவரத்து போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த நேரம் மேலும் குடிபோதையில் இருந்த ஆசாமிகள் கேள்வி எழுப்பிய மற்றும் செல்போனில் வீடியோ எடுத்த பொதுமக்கள் மற்றும் போலீசாரை தாக்க முயன்றதால், இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் அட்டூழியம் செய்த நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் குடிபோதையில் இருந்த நான்கு பேர் பணவாய் பேட்டையை சேர்ந்த ரவுடி பிரகாசம் மற்றும் அவனது கூட்டாளிகளான மணிகண்டன், அருண்குமார், லிங்கேஸ்வரன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த நால்வரும் போக்குவரத்து போலீசாரிடம் அத்துமீறிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.