திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த பட்டாபிராம் சோராஞ்சேரி ஊராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பாரம்பரிய உடைகள் அணிந்து பானையில் பொங்கல் வைத்து அனைத்து தரப்பு மக்களும் வழிபட்டனர்.
ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை நிரூபிக்கும் கல்லூரி மாணவிகள்!
பொங்கல் விழாவில், மழலை குரலில் ஆத்திச்சூடி சரளமாகக் கூறியது காண்போரை வெகுவாகக் கவர்ந்தது. இதனை தொடர்ந்து, சிறுவர், சிறுமிகளுக்கான ஓட்டப்பந்தயம், சாக்குப்போட்டி, பண் உண்ணுதல், பலூன் உடைத்தல், ஊசி நூல் கோர்த்தல், உரியடித்தல், சிலம்பாட்டம், சுருள் சுற்றுதல் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
குறைந்த நேரத்தில் பைபிளில் உள்ள 100 வசனங்களை கூறி 2 சிறுமிகள் சாதனை!
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பொங்கல் விழாவில், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் ரவிகுமார், விஜயகுமார், கார்த்தி மற்றும் சோராஞ்சேரி பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.