முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக, சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாடு முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மாவட்ட கழகச் செயலாளருமான திரு.கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களின் தந்தை தவசிலிங்கம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அன்பு சகோதரர் திரு. கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கு, இந்த கடினமான நேரத்தில் மன தைரியத்தையும் , இந்த இழப்பை தாங்கி கொள்ளும் சக்தியையும் தர வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
தனது தந்தையை இழந்து வாடும் திரு.கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.