Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுகவை ஒன்றிணைக்க தொடர்ந்து முயற்சி- சசிகலா

அதிமுகவை ஒன்றிணைக்க தொடர்ந்து முயற்சி- சசிகலா

-

அதிமுகவை ஒன்றிணைக்க தொடர்ந்து முயற்சி- சசிகலா

அதிமுகவில் உள்ள மோதல் போக்கால் திமுகவிற்குச் சாதகமான சூழல் ஏற்படாது..விட மாட்டேன் என சசிகலா பேசியுள்ளார்.

sasikala

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “அதிமுகவின் தோல்விக்கு பிரிந்து இருப்பது தான் முக்கியமான காரணம். அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கு நான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம். சட்டப்பேரவையில் பேச ஓபிஎஸ்க்கு உரிமை உண்டு, மக்கள் பிரச்சனைக்கே சட்டமன்றம். ஆகவே உறுப்பினர்கள் அனைவருக்கும் பேரவையில் பேச உரிமை உண்டு

ஆன்லைன் ரம்மிக்கு தடைச்சட்டம் கொண்டுவந்த தமிழக அரசுக்கு ஓபிஎஸ் ஆதரவு அளித்து பேசியது சரியே. சட்டமன்ற மோதலை நான் எதிர்ப்பதால் ஓபிஎஸ்க்கு ஆதரவு என கூறமுடியாது. எங்கள் கட்சிக்காரர்களிடம் நான் வித்தியாசம் பார்ப்பது இல்லை. அதிமுகவில் உள்ள மோதல் போக்கால் திமுகவிற்குச் சாதகமான சூழல் ஏற்படாது..விட மாட்டேன்” என்றார்.

 

MUST READ