சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், காவலர்கள் ஒன்பது பேரும், மேல்முறையீடு மனு தாக்கல் செய்து வழக்கறிஞரை வைத்து வாதாடினாலும் சரி நீங்களே வாதிட்டாலும் சரி எங்களுக்கு பிரச்சனை ஒன்றும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனா்.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கடந்த மாதம் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஒன்பது நபர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை உறுதிப்படுத்த கோரி சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட குற்றவாளிகள் ஒன்பது பேரும் சிறையில் இருந்தவாரே, காணொலி வாயிலாக ஆஜராகினர்.

அப்போது நீதிபதிகள், உங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்யக்கோரி சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் நீங்கள் உங்கள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்து உள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர்.
எங்களுக்கு உரிய ஆவணங்கள் வழங்கவில்லை என ஸ்ரீதர் நீதிபதியிடம் முறையிட்டார்.
நீதிபதிகள் உத்தரவு நகலை வைத்து மேல்முறையீட்டு மனு முதலில் தாக்கல் செய்யுங்கள். பிறகுஉரிய ஆவணங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
அப்பொழுது இந்த வழக்கின் முதல் குற்றவாளி ஆய்வாளர் ஸ்ரீதர் இந்த வழக்கில் நானே நேரடியாக ஆஜராகி வாதிடுகிறேன் அனுமதி தாருங்கள் என வேண்டுகோள் வைத்தார்.
முதலில் மேல் முறையீடு செய்யுங்கள் அதில் வழக்கறிஞரை வைத்து வாதாடலாம் அல்லது நீங்களே வாதிடலாம் அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை உங்களுக்கு இதற்கான உத்தரவு நகல் வழங்குவார்கள். எனவே உங்கள் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யுங்கள் இந்த வழக்கு வரும் 30ம் தேதிக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என கூறி வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.
சாத்தான்குளம் வழக்கு – 9 போலீஸாருக்கு மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு…
