சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் – பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

இதனையடுத்து தந்தை – மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டதாக கூடுதலாக 400பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஐந்தரை ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்றது.
நீதிபதி முத்துக்குமரன் கடந்த மாதம் 23ந்தேதி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என தீர்மானிப்பதாக தெரிவித்ததோடு குற்றம்சாட்டப்பட்ட 9 பேரின் உடல்நிலை, மன நிலை குறித்தான அறிக்கை மற்றும் சம்பள கணக்கு மற்றும் சொத்து விவரங்களையும் சிறைச்சாலையில் உள்ள நன்னடத்தை அதிகாரிகள் 9பேரின் செயல்பாடுகள் குறித்தும் மத்திய அரசு மாநில அரசுகள் மூலமாக அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து் கடந்த விசாரணையின் போது அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தண்டணை விபரங்களை தெரிவிக்க வழக்கு இன்று ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 போலீஸூக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. முதல் குற்றவாளியான ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனையும், ரூ.15 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி முத்துக்குமரன் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளாா்.
சாத்தான்குளம் வழக்கு – பிற்பகல் 3.30 மணிக்கு தண்டனை அறிவிப்பு…
