Homeசெய்திகள்தமிழ்நாடு59 நாள் தவெக ஆட்சியில் 151 கற்பழிப்புகள்; திருமாவளவன் ஏண்டா போனோம்னு நினைக்கிறாரா? –நயினார் நாகேந்திரன்

59 நாள் தவெக ஆட்சியில் 151 கற்பழிப்புகள்; திருமாவளவன் ஏண்டா போனோம்னு நினைக்கிறாரா? –நயினார் நாகேந்திரன்

-

- Advertisement -

“தமிழக வெற்றிக் கழகத்தின் 59 நாள் ஆட்சியில் 151 கற்பழிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. திருமாவளவன் அங்கும் இங்கும் கால் வைத்துக் கொண்டு, தவெக கூட்டணிக்கு ஏண்டா போனோம் என்று நினைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்” என்று பாஜக மூந்திய தலைவர் (மாநிலத் தலைவர்) நயினார் நாகேந்திரன் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.59 நாள் தவெக ஆட்சியில் 151 கற்பழிப்புகள்; திருமாவளவன் ஏண்டா போனோம்னு நினைக்கிறாரா? –நயினார் நாகேந்திரன்

​நெலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசு, தவெக கூட்டணி மற்றும் பல்வேறு அரசியல் நிலவரங்கள் குறித்துப் பேசியதன் விவரம் பின்வருமாறு, ”​தமிழக வெற்றிக் கழகத்தின் தற்போதைய ஆட்சி நிர்வாகம் குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான அரசியல் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. தவெக ஆட்சியில் வெறும் 59 நாட்களில் 151 கற்பழிப்புச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. மாநிலத்தில் குற்றங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் இந்த அரசுக்குக் கால அவகாசம் அளித்து, அதன் செயல்பாடுகளைக் கண்காணிப்பது அவசியமான கடமையாகும்” என்றார். ​மேலும், “ஆட்சியைத் தக்க வைக்கவோ அல்லது கவிழ்க்கவோ எம்.எல்.ஏ.க்களை குதிரை பேரம் (Trading) செய்கிறார்கள். இது முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் தான் நடக்கிறதா? ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டை அவரிடம்தான் கேட்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

we-r-hiring

​’அங்கும் ஒரு கால், இங்கும் ஒரு கால்’ – திருமாவளவன் மீது சாடல்
​விசிக தலைவர் திருமாவளவனின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்து விமர்சித்த அவர், ​”திருமாவளவன் கூறும் கருத்துக்கள் பாலுக்குப் பூனை காவல் இருப்பது போல் உள்ளன. அவர் ஏண்டா தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்குப் போனோம் என்று இப்போது நினைக்கிறாரா எனத் தெரியவில்லை. ஏனென்றால், அவர் அங்கும் ஒரு கால், இங்கும் ஒரு கால் என இரு தோணிகளில் பயணிப்பது போல் உள்ளார். அவர் தனது அரசியல் நிலைப்பாட்டை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.”

​”ரீல்ஸ்” செய்யும் அமைச்சர்கள்
​அமைச்சர்களின் செயல்பாடுகளை விமர்சித்த நயினார் நாகேந்திரன், “அமைச்சர்கள் பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்வதில் தவறில்லை. ஆனால், பள்ளி குழந்தைகளை அடிமைகளைப் போல நடத்துவதையும், அவர்களைக் கட்டாயப்படுத்தி ‘ரீல்ஸ்’ (Reels) எடுத்து விளம்பரம் தேடுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. முதலமைச்சரே ரீல்ஸ் செய்கிறார் என்றால், அவரைப் பார்த்து எல்லா அமைச்சர்களும் ரீல்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்” என்று சாடினார்.

பொதுமக்களுக்குப் பேரிடி: தமிழகத்தில் இன்று முதல் ஆரோக்யா பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு!

MUST READ