Homeசெய்திகள்தமிழ்நாடுசதுரகிரி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ!

சதுரகிரி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ!

-

 

சதுரகிரி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ!
File Photo

ஆடி அமாவாசையையொட்டி, நேற்று (ஜூலை 17) விருதுநகர் மாவட்டம், சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்றனர். இந்த நிலையில், மலையில் உள்ள நவலூத்து பகுதியில் நேற்று (ஜூலை 17) இரவு காட்டுத் தீ ஏற்பட்ட நிலையில், மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியதால் கொழுந்துவிட்டு எறிந்து வருகிறது.

நீண்ட நேர விசாரணைக்கு பின் வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடி….மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை!

இதையடுத்து, தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் 30- க்கும் அதிகமான வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தீ கட்டுக்குள் வராததால் சதுரகிரி மலையில் இருந்து கீழே இறங்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து, சுமார் 3,000 பக்தர்களில் 2,000 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மற்ற 1,000- க்கும் அதிகமான பக்தர்கள் மலைக்கோயிலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த விருதுநகர் மாவட்டத்தின் அரசு உயரதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் சதுரகிரிக்கு விரைந்துள்ளனர். அத்துடன், தீயணைப்பு வீரர்களும் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களுடன் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி!

பக்தர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மலையில் இருந்து கீழே அழைத்து வருவது குறித்து கோயில் நிர்வாகத்தினருடன், அரசு உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் கூறுகின்றன.

MUST READ