spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு6-12 ஆம் வகுப்புக்கு ஜூன் 12ல் பள்ளிகள் திறப்பு - தமிழக அரசு

6-12 ஆம் வகுப்புக்கு ஜூன் 12ல் பள்ளிகள் திறப்பு – தமிழக அரசு

-

- Advertisement -

6-12 ஆம் வகுப்புக்கு ஜூன் 12ல் பள்ளிகள் திறப்பு – தமிழக அரசு

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளி திறப்பு மேலும் 5 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் அனைத்தும் ஜூன் 7- ஆம் தேதி திறக்கப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஜூன் 7- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

we-r-hiring

இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 14 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளி திறப்பு மேலும் 5 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழிஅ தொடங்குவது தாமதாம் ஆவதால் தமிழ்நாட்டில் வெயில் தாக்கம் தொடர்கிறது. கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகி உள்ளது. அடுத்து வரக்கூடிய ஒரு வாரத்துக்கு வெயிலின் தாக்கம் மேலும் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என எச்சரிக்கையால் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

MUST READ