Homeசெய்திகள்தமிழ்நாடுபுதுச்சேரியிலும் வரும் 14-ம் தேதி பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியிலும் வரும் 14-ம் தேதி பள்ளிகள் திறப்பு

-

புதுச்சேரியிலும் வரும் 14-ம் தேதி பள்ளிகள் திறப்பு

தமிழகத்தைபோல் புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு ஒருவாரம் தள்ளிவைக்கப்பட்டு வரும் 14ம் தேதி திறக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

ஆங்கில பாட வினாத்தாளில் குழப்பம் - எஸ்.எஸ்.எல்.சி மாணவர்கள் தவிப்பு..

புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. கடந்த மே 4ந் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கி கடந்த 29ந் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த காலத்தில் புதுவையில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. கடந்த 16ந் தேதி அதிகபட்மசமாக 106.16 டிகிரி வெப்பம் பதிவானது. கத்திரி வெயில் முடிந்து ஒரு வாரமாகியும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. நாள்தோறும் அனல் காற்றுடன் வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது.

puducherry

கடந்த 3 நாட்களாக வெப்பத்தின் அளவு 100 டிகிரியை தாண்டியுள்ளது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாமல் தவித்து வருகின்றனர். வீடுகளில் முடங்கினாலும் அடிக்கடி மின்தடையால் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் பள்ளித்திறப்பு வரும் 7ம் தேதி என தள்ளிவைக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இதுபற்றி முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு, “கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் 14ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்” என்றார்.

MUST READ