Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்வைப்பு

திமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்வைப்பு

-

- Advertisement -

அனுமதியின்றி செயல்பட்டதாக 14 தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைக்க மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

Image

we-r-hiring

ஈரோடு கிழக்கு தொகுதி திமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைத்து தேர்தல் நடத்தும் அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அனுமதியின்றி தேர்தல் பணிமனை செயல்பட்டதாக கூறி தேர்தல் அலுவலர்கள் சீல்வைத்தனர். மேலும் 13 இடங்களில் அனுமதியின்றி செயல்படும் பிற கட்சிகளின் பணிமனைகளுக்கும் சீல் வைக்க நடவடிக்கை எடுத்தனர். மாவட்ட தேர்தல் அதிகாரியின் உத்தரவின்பேரில் திமுக தேர்தல் பணிமனைக்கு சீல் வைக்கப்பட்டது. தேர்தல் விதிகளை மீறி அதிக அளவில் ஆட்களை வைத்து கூட்டம் நடத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள்ளுக்கடைமேடு கல்யாணசுந்தரம் வீதி, ஆலமரத்து வீதி, மணல்மேடு, அக்ரகாரம் பூம்புகார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உரிய அனுமதி இன்றி அமைக்கப்பட்ட தேர்தல் பணிமனைகளை தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தும் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகளை அப்புறப்படுத்தியும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக கல்யாணசுந்தரம் வீதி அருகே அனுமதியின்றி செயல்பட்டுவரும் அதிமுக தேர்தல் அலுவலகத்திற்கு சீல் வைக்க தேர்தல் அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் உடன் வந்தனர்.

MUST READ