- Advertisement -
பேனா சிலைக்கு நிதி இருக்கிறது; ஆசிரியர்களுக்கு கொடுக்க இல்லையா?- சீமான்
நிதிப்பற்றாக்குறை இருக்கிறது என்று நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போதே தெரியும்தானே பிறகு ஏன் ஆசிரியர்களுக்கு வாக்குறுதி கொடுத்தீர்கள்? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கைது செய்து அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆசிரியர்களை சந்தித்த பிறகு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “போராட்டத்திற்கே மதிப்பளிக்காத இந்த அரசிடம் உண்ணாவிரதப் போராட்டம் நம் மீது வருந்த போகுதா ? அதனால் போராடுங்கள் உங்கள் உரிமை உண்ணாவிரத போராட்டம் வேண்டாம். சட்டமன்ற உறுப்பினருக்கு எதுக்கு 1.50 லட்சம் சம்பளம்?

சமாதி கட்ட நிதி இருக்கிறது, பேனா சிலை வைக்க நிதி இருக்கிறது. பன்னோக்கு மருத்துவமனை கட்ட நிதி இருக்கிறது. நூலகம் கட்ட நிதி இருக்கிறது. ஆசிரியர்களுக்கு கொடுக்க மட்டுமே அரசிடம் நிதி இல்லையா? நிதிப்பற்றாக்குறை இருக்கிறது என்று நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போதே தெரியும்தானே பிறகு ஏன் ஆசிரியர்களுக்கு வாக்குறுதி கொடுத்தீர்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


