Homeசெய்திகள்தமிழ்நாடு"அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை முதலமைச்சர் உடனடியாக நீக்க வேண்டும்"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்...

“அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை முதலமைச்சர் உடனடியாக நீக்க வேண்டும்”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்!

-

 

"அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை முதலமைச்சர் உடனடியாக நீக்க வேண்டும்"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்!
File Photo

17 மணி நேர சோதனைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், நள்ளிரவில் சென்னையில் கைது செய்து விசாரணைக்காக, காரில் அழைத்துச் சென்றனர். அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நள்ளிரவில் அமைச்சரை கைது செய்து துன்புறுத்தியிருப்பது கண்டனத்துக்குரியது- வைகோ

இந்த நிலையில், மருத்துவமனையைச் சுற்றி மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் சேகர்பாபு, ஐ.பெரியசாமி, உதயநிதி ஸ்டாலின், ரகுபதி, பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அதேபோல், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஒத்துழைப்பு அளிப்பதாகக் கூறிய செந்தில் பாலாஜிக்கு கைதாவதில் என்ன பிரச்சனை? எய்ம்ஸ் மருத்துவர்களை அழைத்து வந்து செந்தில் பாலாஜியை பரிசோதனை செய்ய வேண்டும். சட்டவிரோத மதுபான பார்கள் மூலம் ரூபாய் 2,000 கோடி முறைகேடு நிகழ்ந்துள்ளது. சட்டவிரோத மது விற்பனையால் அரசின் கருவூலத்திற்கு வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.

“செந்தில் பாலாஜி சுயநினைவோடு இல்லை”- அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

அரசுக்கு கிடைக்க வேண்டிய பணம் ஒரே குடும்பத்திற்கு செல்ல செந்தில் பாலாஜியே காரணம். அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை உடனடியாக முதலமைச்சர் நீக்க வேண்டும். அமலாக்கத்துறை தனது கடமையைச் செய்யும் நிலையில், அதைத் தடுக்க நினைப்பது ஏன்? அமலாக்கத்துறையின் விசாரணையில் உள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர்கள் சந்திக்க அனுமதிப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. ஆட்சியின் போது தலைமைச் செயலகத்தில் நடந்த சோதனையை நியாயப்படுத்தி மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோவை செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் காட்டினார்.

MUST READ