Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில்பாலாஜி விவகாரம் - அமலாக்கத்துறை கேவியட் மனு

செந்தில்பாலாஜி விவகாரம் – அமலாக்கத்துறை கேவியட் மனு

-

செந்தில்பாலாஜி விவகாரம் – அமலாக்கத்துறை கேவியட் மனு

செந்தில்பாலாஜி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேலும் ஒரு கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். செந்தில் பாலாஜியை காவலில் எடுப்பது அவசியம். செந்தில்பாலாஜி சிகிச்சையில் இருந்த நாட்களை காவல் நாட்களாக எடுத்துக்கொள்ள முடியாது, ஆகவே அவரது சிகிச்சை முடிந்ததும் காவலில் எடுத்து விசாரிக்கலாம் எனக் கூறினார்.

செந்தில் பாலாஜி விஷயத்தில் என்ன நடக்கிறது?
செந்தில் பாலாஜி

செந்தில்பாலாஜியின் கைது சட்டவிரோதமல்ல என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செந்தில்பாலாஜியின் மனைவி மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால், உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேலும் ஒரு கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் தங்களது தரப்பு கருத்துகளை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. வரும் 24 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடதக்கது.

 

 

MUST READ