Homeசெய்திகள்தமிழ்நாடு"சிலப்பதிகாரம், மணிமேகலை மொழிபெயர்க்க ரூபாய் 2 கோடி"- நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

“சிலப்பதிகாரம், மணிமேகலை மொழிபெயர்க்க ரூபாய் 2 கோடி”- நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

-

- Advertisement -

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024- 2025 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்.19) காலை 10.00 மணிக்கு தாக்கல் செய்து உரையாற்றினார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!

அப்போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, “தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றை 25 மொழிகளில் மொழிபெயர்க்க ரூபாய் 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; மொழித் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூபாய் 5 கோடி நிதியுதவி வழங்கப்படும். அண்ணாவின் அறிவுரைகளைத் தாங்கியே கடைக்கோடி தமிழர்களுக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது; கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடக்கிறது மத்திய அரசு. 100 ஆண்டுகளில் தாக்கல் செய்த பட்ஜெட், தமிழர்களின் வாழ்வை தலைநிமிர்த்தியது.

கிராமப் பகுதிகளில் 8 லட்சம் கான்கீரிட் வீடுகள் கட்டித்தரப்படும். ரூபாய் 1,000 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்படும். 2030- ஆம் ஆண்டுக்குள் குடிசையில்லாத் தமிழ்நாட்டை உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடங்கப்படும். மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்கள் 100 பல்கலைக்கழகங்களில் இடம்பெற ரூபாய் 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

‘தமிழ்நாடு பட்ஜெட் 2024’: மாபெரும் 7 தமிழ்க்கனவு- பட்ஜெட் சாராம்சம்!

100 ஆண்டுகளில் தாக்கல் செய்த பட்ஜெட், தமிழர்களின் வாழ்வை தலைநிமிர்த்தியது. பேரறிஞ்ர் அண்ணாவின் சொல்லோவியம் தான் நிதிநிலை அறிக்கையை தயாரிக்க உதவியது” என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

MUST READ