
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தி.மு.க. மகளிரணி மாநாடு இன்று (அக்.14) மாலை 06.00 மணிக்கு தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக சென்னை வந்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்னை ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

மகளிர் உரிமைத்தொகை- வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் பணி தொடங்கியது!
அங்கு இன்று (அக்.14) காலை 11.00 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில், தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், திருநாவுக்கரசர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!
கூட்டத்தில், 2024- ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், சாதிவாரி கணக்கெடுப்பு, மகளிர் இடஒதுக்கீடு, தமிழக அரசியல் சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சோனியா காந்தி, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.