spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"ஸ்பெயினில் ரூபாய் 3,440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து"- விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

“ஸ்பெயினில் ரூபாய் 3,440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து”- விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

-

- Advertisement -

 

"ஸ்பெயினில் ரூபாய் 3,440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து"- விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

we-r-hiring

10 நாள் அரசுமுறை ஸ்பெயின் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவை – திருவனந்தபுரம் வந்தே பாரத் ரயில் இயக்க கோரிக்கை!

விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் முதலீடுகளை செய்வதற்கு நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு தனிப்பாதையில் பயணிப்பதாக நியூயார்க் டைம்ஸ் இதழ் பாராட்டியுள்ளது. ஸ்பெயினில் பல்வேறு நிறுவனங்களுடன் ரூபாய் 3,440 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தமிழ்நாட்டுக்கான முதலீடுகளை ஈர்த்துவிட்டு திரும்பியுள்ளேன். ஸ்பெயின் சுற்றுப்பயணம் சாதனை பயணமாக அமைந்துள்ளது. ஸ்பெயின் தொழிலதிபர்களிடம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான சாதக சூழலை எடுத்துரைத்தேன். தமிழ்நாட்டை தொழில்துறையில் தலைசிறந்த மாநிலமாக மாற்றுவதற்கான முயற்சிகள் தொடரும்.

சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையைக் கேட்டு சிரித்தேன். காங்கிரஸ் தான் ஆளுங்கட்சி போலவும், பா.ஜ.க. எதிர்க்கட்சிப் போலவும் பிரதமர் பேசியிருக்கிறார்” என்று விமர்சித்துள்ளார்.

MUST READ