spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசிறப்பு முகாம் ஏற்பாடு- நெறிமுறைகள் வெளியீடு!

சிறப்பு முகாம் ஏற்பாடு- நெறிமுறைகள் வெளியீடு!

-

- Advertisement -

 

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
Photo: TN Govt

‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ தொடர்பாக முகாம் அமைப்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

we-r-hiring

திமுகவினர் பயன்பெறவே மகளிர் உதவித் தொகை- தம்பிதுரை எம்பி

அதன்படி, ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், மாவட்ட சி.இ.ஓ.க்கள் ஆகியோருக்கு தமிழக அரசின் சிறப்புப் பணி அலுவலர் இளம்பகவத் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களை முகாம் பணிகளில் ஈடுபடுத்த பரிந்துரைச் செய்து உத்தரவிட்டுள்ளார். இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்களைக் கொண்டு மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கான விண்ணப்பம் பெறப்படும். தன்னார்வலர்கள் எந்தெந்த நியாய விலை கடைப் பகுதியில் வசிக்கிறார்கள் என்ற விவரம் விரைவில் வழங்கப்படும். ரேஷன் கடைகளில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் இருக்கும் தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

400 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டுபிடிப்பு!

மகளிர் உரிமைத் திட்டம், வரும் செப்டம்பர் 15- ஆம் தேதி முதல் செயல்பாட்டு வரவுள்ள நிலையில், அதற்கான பணிகளில் ஆட்சியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

MUST READ