spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடியில் இருந்து திமுக இளைஞரணி மாநாட்டிற்கு சிறப்பு ரயில்!

ஆவடியில் இருந்து திமுக இளைஞரணி மாநாட்டிற்கு சிறப்பு ரயில்!

-

- Advertisement -

திமுக இளைஞரணியின் 2-வது மாநில  மாநாட்டிற்கு ஆவடியில் இருந்து சேலத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

we-r-hiring

திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் 7000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேலம் மாநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர் . சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞர் அணி 2ஆவது மாநில மாநாட்டிற்கு ஆவடியில் இருந்து தனி சிறப்பு ரயில் முன் பதிவு செய்யப்பட்டு இயக்கப்பட்டது. ஆவடியில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட சிறப்பு ரயில் முன் பதிவு செய்யப்பட்டு 20 கம்பார்ட்மென்ட் கொண்ட ரயிலில், திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞர் அணியை சேர்ந்த சுமார் 2500 இளைஞர்கள் புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர், ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சாமு நாசர் அளித்த பேட்டியில், மாண்புமிகு தமிழக முதல்வர் ஆணையின்படி மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த இரண்டாவது மாநில மாநாடு மிகச் சிறப்பாகவும் எழுச்சியுடனும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஆவடியில் இருந்து சிறப்பு ரயிலும் அந்த ரயிலில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட இளைஞர்கள் பயணம் மேற்கொள்கின்றனர்.   ஆவடியில் இருந்து 2500 பேரும் 257 கார்களும் மற்றும் 150 வேன்களும் 10 பேருந்துகளில் இளைஞர்கள் சேலம் மாநாட்டிற்கு செல்கின்றனர். இந்த மாநாடானது இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என கூறினார்.

MUST READ