Homeசெய்திகள்தமிழ்நாடுயூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஸ்ரீமதி தாயார் புகார்

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஸ்ரீமதி தாயார் புகார்

-

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஸ்ரீமதி தாயார் புகார்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் பள்ளி நிர்வாகிகளிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு அவதூறு பரப்பியதாக கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார்.

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஸ்ரீமதி தாயார் புகார்

ஸ்ரீமதியின் தாயார் செல்வி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் தமது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தொடர்ந்து கூறி வந்ததாக குறிப்பிட்டார். அதே நேரத்தில் சவுக்கு சங்கர் தமது மகள் ஸ்ரீமதி குறித்தும் தன்னை பற்றியும் அவதூறு கருத்துகளை சமூக ஊடகங்களில் தெரிவித்து வந்தார் என்றும் இது குறித்து அப்போதே சங்கர் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்ததாகவும் செல்வி தெரிவித்தார்.

சவுக்கு சங்கரின் தனி உதவியாளரும் அவரது ஊடக பணிகளை கவனித்து வருபவருமான பிரதீப், தனியார் தொலைக்காட்சிக்கு தற்போது அளித்த பேட்டி ஒன்றில், ஸ்ரீ சக்தி இன்டர்னேஷனல் பள்ளி நிர்வாகத்திடம் சவுக்கு சங்கர் பெரும் தொகையை பெற்றுக் கொண்டு மகள் ஶ்ரீமதி பற்றியும் தன்னைப் பற்றியும் இழிவுபடுத்தி, கொச்சைப்படுத்தி பேசுவதற்காகப் பணியமைக்கப்பட்டார் என்று தெரிவித்திருந்ததை புகாரில் செல்வி குறிப்பிட்டுள்ளார்.

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஸ்ரீமதி தாயார் புகார்

அந்த பேட்டியின் மூலம் ஸ்ரீ சக்தி இன்டர்னேஷனல் பள்ளி நிர்வாகிகள் ரவிக்குமார், சாந்தி சிவசங்கரன் ஆகியோரிடம் சவுக்கு சங்கர் கையூட்டு பெற்றார் எனத் தெரிய வருவதாக அவர் கூறியுள்ளார்.

தனது மகள் ஸ்ரீமதி மற்றும் தங்கள் குடும்பத்தினர் மீது சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பி, இழிவு படுத்தி, மன உளைச்சலை ஏற்படுத்திய சவுக்கு சங்கர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதே போன்று தமது மகளையும் தன்னையும் தொடர்ந்து இழிவுபடுத்தும் கார்த்திக் பிள்ளை என்ற யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்கவும் ஶ்ரீமதியின் தாயார் செல்வி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

MUST READ