Homeசெய்திகள்தமிழ்நாடுஸ்டெர்லைட் ஆலை மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

ஸ்டெர்லைட் ஆலை மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

-

 

ஸ்டெர்லைட்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

வணங்கான் படத்தில் முக்கிய வேடத்தில் சரத்குமாரின் முதல் மனைவி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் அனுமதிக் கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது, “ஸ்டெர்லைட் ஆலையால் செய்யப்பட்ட விதிமீறல்கள் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்திய சுற்றுச்சூழல் மாசுபாடு மிகவும் கவலைக்குரியது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று.

போய் படிங்க பா… மாணவர்களுக்கு அறிவுறுத்தி வீடியோ வௌியிட்ட இளம் நடிகர்…

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாகக் கையாண்டுள்ளது. ஸ்டெர்லைட் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்ததில் வரம்பு மீறல் இருந்ததாகக் கருதவில்லை. எனவே, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்வதுடன், ஸ்டெர்லைட் தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ