Homeசெய்திகள்தமிழ்நாடு1 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை… பெருமையின் அடையாளம்!

1 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை… பெருமையின் அடையாளம்!

-

- Advertisement -

தமிழகத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.1 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை… பெருமையின் அடையாளம்!

தமிழ்நாட்டில் 2026-27 கல்வியாண்டிற்கான அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை, ஏப்ரல் மாதத்திலேயே 1 லட்சத்தைக் கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அரசு மற்றம் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளதாக பள்ளிக்களிவித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

we-r-hiring

2026-2027 ஆம் கல்வி ஆண்டுக்கு 1ம் வகுப்பில் 97,737 பேர், 2-3 வரையிலான வகுப்புகளில் 8,178 பேர், மழிலையர் வகுப்புகளில் 6,796 பேர் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு 5 லட்சம் மாணவர்களை சேர்பப்தற்கான இலக்கு நிர்ணயிக்கபடப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 27, 2026 நிலவரப்படி, 37,554 அரசுப் பள்ளிகளில் இதுவரை 1,12,711 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

‘அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல, அது பெருமையின் அடையாளம்’ என்ற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில், கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் பெற்றோரிடம் நம்பிக்கையை உருவாக்கியுள்ளன.

காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற நலத்திட்டங்கள், மாணவர்களின் பள்ளிச்சேர்க்கையை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளன. இதனுடன், அரசுப் பள்ளிகளில் நவீன கட்டமைப்புகள், தரமான கற்பித்தல் முறைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் ஆகியவை சேர்க்கை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளன.

இந்த சாதனையை ஏற்படுத்திய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்குப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதால், மாணவர் சேர்க்கை மேலும் அதிகரிக்கும் என கல்வித்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தில் “ஜன நாயகன்” பார்த்தவர் கைது!

MUST READ