Homeசெய்திகள்தமிழ்நாடுதேர்வில் காப்பி அடித்ததால் கண்டித்த பேராசிரியர்- கல்லூரி மாணவர் தற்கொலை

தேர்வில் காப்பி அடித்ததால் கண்டித்த பேராசிரியர்- கல்லூரி மாணவர் தற்கொலை

-

- Advertisement -

கோவை ஈச்சனாரி அருகே தனியார் கல்லூரி விடுதியில் முதலாமாண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

death

we-r-hiring

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கணேசன். குன்னூரில் தங்கி சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மகன் பார்த்தசாரதி (17), கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாமாண்டு படித்து வந்தார். இன்று கல்லூரியில் தேர்வு நடைபெற்றது. அப்போது திடிரென விடுதி அறைக்குச் சென்ற பார்த்தசாரதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது நண்பர்கள் அறைக்கு சென்று கதைவை நீண்ட தேரம் தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் விடுதி வார்டன் மற்றும் ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பார்த்தசாரதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து மாணவர் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவரின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

முதல் கட்ட விசாரணையில் இன்று தேர்வின் போது பார்த்தசாரதி செல்போனை பார்த்த காப்பியடித்து எழுதியதாகவும் இதனால் ஆசிரியர் அவரது செல்போனை பறித்துக் கொண்டு வெளியே செல்ல கண்டித்ததாகவும் தெரிகிறது. மேலும் தேர்வு மைய கண்காணிப்பாளரை பார்க்க கூறியுள்ளார். இதனால் மாணவர் அங்கிருந்து சென்று அந்த மன உலைச்சலில் மாணவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ