Homeசெய்திகள்தமிழ்நாடுகோவை அருகே ஓடும் காரில் திடீர் தீ விபத்து... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 2 பயணிகள்!

கோவை அருகே ஓடும் காரில் திடீர் தீ விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 2 பயணிகள்!

-

- Advertisement -
kadalkanni

கோவை அருகே ஓடும் காரில் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் துளசிமணி. பழைய இரும்பு வியாபாரம் செய்து வரும் இவர் நேற்று மாலை சொந்த வேலை காரணமாக கோவை சென்றுவிட்டு காரில் திருப்பூர் திரும்பி கொண்டிருந்தார். கோவை – அவிநாசி சாலையில் சூலூர் பிரிவு அருகே சென்றபோது, கார் இன்ஜினிலிருந்து திடீரென கரும்புகை வெளியேறியுள்ளது.

இதனை கவனித்த கார் ஓட்டுநர் நவீன், உடனடியாக சாலையோரம் காரை நிறுத்திவிட்டு, இருவரும் வெளியேறியுள்ளனர். சிறிது நேரத்தில் காரில் தீப்பற்றி மளமளவென கார் முழுவதும் பரவியது. இதனால் சாலையில் கார் தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்தவர்கள் இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

எனினும் இந்த தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்து காரணமாக கோவை – அவிநாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

MUST READ