Homeசெய்திகள்தமிழ்நாடு'கோடைக்கால பயிற்சி முகாம் கட்டணம்'- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

‘கோடைக்கால பயிற்சி முகாம் கட்டணம்’- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

-

 

"இன்னும் பல அமைச்சர்களுக்கு தண்டனை கிடைக்கும்"- எடப்பாடி பழனிசாமி பேச்சு!

விளையாட்டு ஆணையம் நடத்தும் கோடைக்கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வேரோடு கருகி வரும் மிளகு கொடிகள்- விவசாயிகள் கவலை!

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் நடத்தும் கோடைக்கால பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் தி.மு.க. அரசு கட்டணம் வசூலிக்கிறது. கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாமில் பங்கேற்க சென்னையில் ரூபாய் 500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கோடைக்கால பயிற்சி முகாமில் பங்கேற்கும் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள். பிற மாவட்டங்களில் கோடைக்கால பயிற்சி முகாமிற்கு ரூபாய் 200 கட்டணம் நிர்ணயித்துள்ளது எஸ்டிஏடி. பயிற்சி முகாமிற்கு ரூபாய் 200, ரூபாய் 500 கட்டணம் வசூலிப்பது விளையாட்டு ஆர்வலர்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. தகுதியில்லாதவர் கையில் அதிகாரம் கிடைத்தால் திறமைசாலிகளைக் கூட தகுதியற்றவர்கள் ஆக்கிவிடுவர்.

ஏறுமுகத்தில் மளிகைப்பொருட்கள் விலை!

துடிப்புமிக்க மாணவர்களை முடக்கிப்போடும் நாடகத்தை நடத்தும் அரசின் செயல் கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ