கோடை வெயிலின் தாக்கத்தால் மிளகு கொடிகள் வேரோடு கருகி வருவதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே கிடைக்கும் நெல் மூட்டைகள்!
தருமபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல்மலை, பெரியூர் உள்ளிட்ட ஏழு கிராமங்களில் 3,000- க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு சுமார் 2,000 ஏக்கரில் காபி மற்றும் மிளகு பிரதானமாக சாகுபடி செய்து வருகின்றனர். இங்குள்ள வத்தல் மலையில் எப்போதும் குளிர்ந்த காலநிலை நிலவு வருவது வழக்கம் ஆனால் இந்தாண்டு வழக்கத்தை விட அதிக வெப்பம் காரணமாக, மிளகு பயிர்கள் மகசூல் தருகின்ற நேரத்தில் வேரோடு கருகி வருகிறது.
ஒரு மிளகு கொடி காய்ப்பிடிக்க 5 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதுவரை தங்கள் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஏறுமுகத்தில் மளிகைப்பொருட்கள் விலை!
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “அரசாங்கம் எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்; நிவாரணம் கிடைக்காவிட்டால் பிழைப்புத் தேடி வேறு ஊருக்கு செல்ல வேண்டும். மீண்டும் மிளகு பயிரிட்டாலும் 5 ஆண்டுகள் கழித்தே மகசூல் கிடைக்கும்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.