பறந்து போகிற பறவைகள் கடல் மீது எச்சமிட்டால் கடலுக்கு ஏதும் கலங்கமில்லை. அதேபோல கலைஞயரை பற்றி பேசுவதால் கலைஞரின் புகழ் குறையப்போவதில்லை என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஒரு மனிதனுக்கு கல்லால் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும். சொல்லில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் இரண்டும் காலம் கடந்தும் நிலைக்கும்.
கலைஞருக்கு கல்லால் நினைவுச்சின்னம் எழுப்பி இருக்கிற அந்த இடத்தில் நாம் நிற்கிறோம். கவிஞர்கள் நாங்கள் சொல்லால் நினைவுச் சின்னம் எழுப்பி இருக்கிறோம். அது தான் கலைஞர் 100 கவிதைகள் 100 என்ற தொகுப்பு.
கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு நாளுக்கு நாங்கள் அவருக்கு படைத்திருக்கும் காணிக்கை கலைஞர் 100 கவிதைகள் 100 என்ற நூல் தொகுப்பு.
55 நிமிடங்களுக்கு முன்னால் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இந்த நூலை அவரது முகாம் அலுவலகத்தில் வெளியிட்டார், திராவிடர் கழக தலைவர் ஐயா வீரமணி அவர்கள் இந்த நூலை பெற்றுக் கொண்டார்.
இந்த நூல் தான் கவிஞர்கள் நாங்கள் நன்றியோடு கலைஞருக்கு படைப்பது இதில் 100 கவிதைகள் இடம் பெற்று இருக்கிறது. நூறு கவிதைகளும் வரலாற்று சிறப்புமிக்க கவிதைகள் என்பதை சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
இதில் இடம் பெற்று இருக்கிற முதல் கவிதை படைத்தவர் பாவேந்தர் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை , டாக்டர் இலக்குவனார், குலோத்துங்கன் போன்ற அரிய பெருமக்களும், கவிஞர்களாகிய அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், வாலி, மேத்தா, வைரமுத்து போன்ற கவிஞர்களும் கனிமொழி தமிழச்சி தங்கபாண்டியன் போன்ற பெண்பால் கவிஞர்கள் எழுதிய கவிதைகள் இடம் பெற்றுள்ளது.
உங்கள் காலத்துக்குப் பிறகுதான் உங்கள் புகழ் ஓங்கும் நான் அதை பார்க்கிறேன்.இந்த நினைவிடத்துக்கு ஆண்டுக்கு ஆண்டு கூட்டம் பெருகி வருவதை பார்க்கிறபோது கலைஞரின் பெருமை கூடிக் கொண்டே போகிறது.
கலைஞரைப் பற்றி சிலர் கருத்து தெரிவிக்கலாம். நல்லது நான் ஒன்றை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். பறந்து போகிற பறவைகள் கடல் மீது எச்சமிட்டால் கடலுக்கு ஏதும் கலங்கமில்லை. அதேபோல கலைஞயரை பற்றி பேசுவதால் கலைஞரின் புகழ் குறையப்போவதில்லை. வாழ்க கலைஞர் வாழ்க கலைஞர் புகழ்.
அதே போன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தொகை,முன்னாள் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திருநாவுகரசு,தங்கபாலு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வபெருந்தொகை ;
காங்கிரஸ் கமிட்டி சார்பில் மறைந்த கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி இருக்கிறோம். தமிழ் இனத்துக்காக போராடியவர்.
கலைஞரின் 6-ஆம் ஆண்டு நினைவு நாள்: மெரினா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!
தமிழ்நாட்டில் மனிதர்கள் உள்ளவரை முத்தமிழ் அறிஞர் கலைஞரின் புகழ் ஓங்கி நிற்கும் எனவும், இவருக்கு நிகரான தலைவர் இவரே என தெரிவித்தார்.