தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கேசவ விநாயகத்திடம் 6 மணி நேரம் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்தது.
நாடாளுமன்ற தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடமிருந்து ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை சிபிசிஐடி போலிசார், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோரிடம் ஏற்கனவே விசாரணை மேற்கொண்டு இருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் இன்று சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் 2வது முறையாக விசாரணைக்கு ஆஜராகினார். அவரிடம் ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கேசவ விநாயகத்திடம் சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. இதனை அடுத்து அவர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.