தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கான தடையை செப்டம்பர் 8-ம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

எந்த 5 தொகுதிகள்?

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் இந்த 5 தொகுதிகளும் காலியாகியுள்ளன. அவை:
• திருச்சி கிழக்கு
• கரூர்
• விராலிமலை
• பெருந்துறை
• அம்பாசமுத்திரம்
இதில் திருச்சி கிழக்கு தொகுதி முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளில் ஒன்றாகும். அவர் பின்னர் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு, திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இடைத்தேர்தல் ஏன் தாமதமாகிறது?
இந்த 5 தொகுதிகளில் நடைபெற்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து பல்வேறு தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகள் முடிவுக்கு வருவதற்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் சட்டரீதியான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.
தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்திய தேர்தல் ஆணையம் தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் முடிவடையும் வரை, இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றம் செப்டம்பர் 8-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
தவெக அரசு கோரிக்கை நிராகரிப்பு!
5 தொகுதிகளும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் இருப்பதால், இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், தற்போது அந்தத் தடையை நீக்காமல் செப்டம்பர் 8 வரை நீட்டிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 தொகுதிகளில் அடுத்து என்ன நடக்கும்?
தற்போதைய நிலவரப்படி, இந்த 5 தொகுதிகளிலும் உடனடியாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பில்லை. முதலில் நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகள் எந்த வகையில் முடிவடைகின்றன என்பது முக்கியமானதாக உள்ளது.
குறிப்பாக, திருச்சி கிழக்கு தொகுதி முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த தொகுதி என்பதால், இந்த இடைத்தேர்தல் அரசியல் ரீதியாகவும் அதிக கவனம் பெற்றுள்ளது.
மேலும், கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகளிலும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் வெற்றிக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
செப்டம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அடுத்த விசாரணையில் என்ன முடிவு எடுக்கப்படும்? தேர்தல் வழக்குகள் விரைவில் முடிவுக்கு வருமா? 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் தற்போது எழுந்துள்ளது.
ராஜினாமாவை பார்த்ததும் அழைத்த விஜய்: செப்டம்பர் 10-இல் தவெக-வில் இணைவதாக நடிகர் தேவன் அறிவிப்பு!
