Homeசெய்திகள்தமிழ்நாடு"பொங்கலுக்கு ரெடியாகும் வேட்டி, சேலை!" – ₹300 கோடி முன்பணம் ஒதுக்கிய தமிழ்நாடு அரசு

“பொங்கலுக்கு ரெடியாகும் வேட்டி, சேலை!” – ₹300 கோடி முன்பணம் ஒதுக்கிய தமிழ்நாடு அரசு

-

- Advertisement -

வருகிற 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளுக்கு ₹300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டம் குறித்த முக்கிய விபரங்கள் இதோ:
தமிழ்நாடு அரசு

அரசாணையின் விபரம்:
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காகப் பண்டிகைக்குப் பல மாதங்களுக்கு முன்பே நூல் கொள்முதல் மற்றும் நெசவுப் பணிகளைத் தொடங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்வது வழக்கம்.

we-r-hiring

அந்த வகையில், 2027 பொங்கல் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குக் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் மொத்தம் ₹642 கோடி நிதி கோரப்பட்டிருந்தது. அதில், தற்போது முதற்கட்டமாக நூல் கொள்முதல் செய்வதற்கும், நெசவாளர்களுக்கு உற்பத்தி முன்பணம் (Advance) வழங்குவதற்கும் ₹300 கோடியைத் தமிழ்நாடு அரசு உடனடியாக ஒா்கீடு செய்துள்ளது.

நெசவாளர் சங்கங்கள் மூலம் உற்பத்தி:
இத்திட்டத்தின் கீழ் 2027 பொங்கல் பண்டிகைக்காக மொத்தம் 2.27 கோடி சேலைகளும், 2.25 கோடி வேட்டைகளும் உற்பத்தி செய்யப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் கைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் மூலம் தகுதியான நெசவாளர்களைக் கொண்டு நெய்யப்பட உள்ளன.

​அரசு தற்போது நிதியை முன்கூட்டியே ஒதுக்கியுள்ளதால், நூல் கொள்முதல் பணிகள் விரைந்து தொடங்கப்பட்டு, வேட்டி, சேலை உற்பத்திப் பணிகள் உரிய நேரத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ