தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கடைகளைத் தனியார் மயமாக்குவது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே மதுவிலக்கு மற்றும் கலால் சட்டங்களில் அவசியமான திருத்தங்களை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.


கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் தனியார்வசம் செல்லக்கூடும் என்ற இந்தச் செய்தி அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகர்ப்புறங்களில் முதற்கட்ட நடவடிக்கை
கடந்த இரண்டு தசாப்தங்களாக அரசு நிறுவனமாகச் செயல்பட்டு வரும் டாஸ்மாக் அமைப்பில், நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் வருவாய் ஈட்டும் முறைகளை மாற்றிமைக்கும் நோக்கில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் முதற்கட்டமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட மதுபானக் கடைகளை மட்டும் தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
முந்தைய அரசின் முக்கிய முன்னெடுப்புகள்
தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், மதுபானக் கடைகள் மற்றும் பொதுச் சுகாதாரம் தொடர்பான பல அதிரடி நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு அருகில் இயங்கி வந்த 717 மதுபானக் கடைகள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது நகர்ப்புறங்களில் உள்ள கடைகளைத் தனியார் மயமாக்குவது தொடர்பான சட்டத் திருத்தங்கள் குறித்த அறிவிப்பு வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொளத்தூர் தொகுதியில் இன்று EVM, VVPAT இயந்திரங்கள் சரிபார்ப்பு: 14 இயந்திரங்கள் பரிசோதனை!
