Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநருக்கு அரசியல் பேச முழு உரிமை இருக்கிறது- தமிழிசை

ஆளுநருக்கு அரசியல் பேச முழு உரிமை இருக்கிறது- தமிழிசை

-

ஆளுநருக்கு அரசியல் பேச முழு உரிமை இருக்கிறது- தமிழிசை

ஆளுநருக்கு அரசியல் பேச முழு உரிமை இருக்கிறது என்று‌ புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

3 மசோதாக்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரியில் ஏற்கனவே ஆயிரம் ரூபாய் கொடுக்க ஆரம்பித்து விட்டோம். 17 ஆயிரம் பெண்களுக்கு கொடுத்திருக்கிறோம். மற்ற பெண்களுக்கும் கொடுக்க உள்ளோம். வாக்குறுதி ஒன்றை கொடுத்துவிட்டு யாருக்கு கொடுக்க வேண்டும் என்று தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் அளவுகோள் மிக கடுமையாக இருக்கிறது. என்ன வாக்குறுதி கொடுத்தமோ அதை நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகள் ஆட்சி முடிந்து நிலையில் இன்னும் கொடுக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

தமிழிசை

தமிழக ஆளுநரின் செயல்பாடு குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு செயல்பாடு இருக்கிறது. தமிழக ஆளுநர் பற்றி கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. குடியரசு தலைவருக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு கடிதம் எழுதினார்கள். ஆளுநர் வேண்டாம் என்று கூறுபவர்கள், எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஆளுநரை போய் எதற்கு பார்த்தார்கள்? ஆளுநருக்கு அரசியல் பேச முழு உரிமை இருக்கிறது. கருத்திற்கு எதிர் கருத்து சொல்லலாம். அப்படிச் சொன்னால் கருப்புக்கொடி காட்டுவேன். வெளிநடப்பு செய்வேன் என்கிறார்கள், இணக்கத்தோடு செயல்பட்டால் மக்களுக்கு நல்லது” என்று கூறினார்.

MUST READ